என் கையில ஒரு கேமரா இல்லையேன்னு நேத்து ரொம்ப வருத்தப்பட்டேன். என்னன்னு யோசிக்கிறீங்களா? தாய்மார்கள் தீபாவளி, பொங்கல் நேரத்துல புடவை, நகைக்கடைக்குள்ள போயிட்டு வர்றதுக்குள்ள வெளிய கார்த்திருக்கிற அவர்களோட கணவன்மார்கள் தலையை சுத்தி சிலந்தி வலை பிண்ணின ஜோக் அ குமுதத்துலயோ விகடன்லையோ படிச்சிருப்பீங்க. அப்படி ஒரு காட்சிய நேத்து நான் கண்டேன். சிலந்தி வலைய இல்ல, ஒரு மனுசர் வகுப்பறையில தூங்குற மாதிரி அங்கே இருந்த நாற்காலியிலே தலை டொய்ங் டொய்ங் நு கீழ விழ, ரொம்ப பாவமா தூங்கிட்டு இருந்தார். எனக்கு ஒரு பக்கம் சிரிப்பு, இன்னொரு பக்கம் வருத்தம், இப்போ இந்த பதிவோட முதல் வரிக்கு அர்த்தம் விளங்குதா?

சின்ன பிள்ளையில இருக்கும்போது எனக்கு இந்த மாய தி நகர் பக்கம் போறதே பிடிக்காது. எங்கும்மா, சாச்சி (சித்தி) எல்லாம் ஒரு கடை விடாம ஏறி எறங்க, நான் சாலையோரம இருக்குற பொம்மை கடையை பாத்துட்டே பொழுதை கழிப்பேன். அதுவும் நகைக்கடை மாதிரி ஒரு எரிச்சல் உண்டாக்கும் இடம் கிடையவே கிடையாது. எப்படா இந்த ‘பொம்பளைங்க’ வாங்கி முடிப்பாங்கன்னு ஆகிடும்.

இப்ப நிலைமை தலைகீழ். எங்கும்மா என்னோட துணிக்கடைக்கோ நகைக்கடைக்கோ வந்தா அவங்க கொஞ்ச நேரத்துலயே சடஞ்சிடுவாங்க. அந்த கடைக்காரரும் கடுப்பாகிடுவாறு .

பாத்திங்களா, சொல்ல வந்த கதைய விட்டுட்டு எங்கயோ போயிட்டேன். இது தான் எனக்கிருக்குற கெட்ட பழக்கம். என் மண்டைக்குள்ள கொசு வர்த்தி சுருள் இருக்கான்னு தெரியல, அந்த அளவுக்கு ஆ ஊனா பழைய நினைவுகளுக்கு போய்டுவேன் நான் (இதுனாலயே பல முறை திட்டு வாங்கி இருக்கேன்). ஹீ ஹீ.

நேத்து எங்க கம்மா (அம்மாவோட அம்மா) போத்திஸ் போகலாமான்னு கேட்டப்போ ஒழுங்கா இருக்குற கொஞ்ச மூளைய பயன்படுத்தி வேண்டாம்னு சொல்லி இருந்திருக்கணும். மண்டைய மண்டைய ஆட்டிட்டு கிளம்பியாச்சு. ஆகா ரோடு எல்லாம் காலியா கிடக்கே நல்லதா போச்சுன்னு நினைச்சேன். எப்பவும் அறை மணி நேரமாச்சும் ஆகும், அங்க போய் சேர. ஆனா நேத்து அழகா கால் மணி நேரத்துலயே சேர்ந்தாச்சு. இருங்க இருங்க, அவ்வளோ எளிதா முடிஞ்சிருந்த காரியம்னா இந்த பதிவே போட்டிருக்க மாட்டேன் . அப்புறம் தானே கதையே. இதுக்கு மேல போவ முடியதும்மான்னு ஆட்டோக்காரர் சாலை தொடக்கத்துலயே இறக்கி விட்டுட்டார். அது ஒன்னும் பெரிய தொலைவு இல்ல தான். இருந்தாலும் அந்த நெரிசல் இருக்கே..

எப்படியோ அடிச்சு புடிச்சு கடைக்குள்ள நுழைஞ்சிட்டோம். நுழைஞ்சிட்டோம். அவ்ளோ தான். இங்க, அங்க நகர முடியல.

திரும்பிடலாம்னு சொன்ன கேக்கவா போறாங்க. சரி, இன்னைக்கு நம்ம விதி அவ்வளவு தான்னு நினைச்சு தைரியத்தை ஏற்படுத்திக்கொண்டு அல்லாஹ் அல்லாஹ்னு அடி மேல அடி வெச்சு நகரும்போது தான் மேற்படி சொன்ன அந்த மனுசர் தூங்குற காட்சியை பார்த்தேன். பார்த்ததும், பல விஷயம் நினைவுக்கு வந்து, நான் சின்ன வயசுல எங்க வீட்டு பெண்களோட துணிக்கடைக்கு வந்த கஷ்டமெல்லாம் அப்படியே பனிக்கட்டி மாதிரி கரைஞ்சு போச்சு.

நானாச்சும் பரவாயில்ல, புடவை தேர்வு செய்றேன்னு சொல்லியாச்சும் நேரத்த போக்கிடுவேன், அந்த சாக்குல எனக்கும் ரெண்டு சல்வார் வாங்கிக்குவேன். அந்த மனுசரை கொஞ்சம் நினைச்சு பாருங்க.

இந்த பதிவு, மனைவிமார்களை தங்கள் சம்பளப்பனதொடு கடைக்குள் அனுப்பி வைத்து விட்டு, வெளியில் அறுவையான ஒரு வகுப்பில் தூங்க முடியாமல் தூங்குவதை போன்ற கஷ்டத்தை அனுபவிக்கும் அந்த அப்பாவி மனிதர்களுக்காக..

Advertisements

3 Responses to “”

 1. Ela Says:

  i think Indian males have evolved in a matter where their European counterparts are still struggling and looking for an way out!

  I have seen men here desperately trying to look cheerful and saying good things about how the dresses fit and blah blah….they are expected to look excited every time their female counterpart holds a costly dress onto her and flashes a sweet smile asking whether it looks good…..once i saw a smart guy pretending not to have noticed that by exactly turning away at the right moment…..

  So men sitting and sleeping over and standing out side the shop are really smart thing to do….so altleast in thing our men seem to be smart!

 2. SLOGGER Says:

  Don’t you know how guys are made?

  Men – 60% Love, 20% Patience, 10% Goodwill, 10% Modesty, 5% Honesty
  I know it adds up more than 100%, what to do Men always give more than 100%. I still don’t know how to authenticate the remaining 78%?

  Enna, we lie every now and then… 🙂

 3. The Victorious.. Says:

  Sis,Indian men are definitely smart, see what Slogger annachi says!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: